தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்கிறார்.
தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதனால், தமிழக மாநில பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்கிறார்.