மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலின்டா, உலகின் மிகப்பெரியஅறக்கட்டளையான கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து, 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பில் கேட்ஸும், அவரது மனைவி மெலின்டா கேட்ஸும் அண்மையில் விவகாரத்து செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த கேட்ஸ் அறக்கட்டளையில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இவர்களின் விவகாரத்து முடிவால், கேட்ஸ் அறக்கட்டளை செயல்பாடுகளை நிர்வகிப்பதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும், தொடர்ந்து பொறுப்பில் நீட்டிப்போம் என்றும் இருவரும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பில் நீட்டிக்க முடியாது என முடிவு எடுத்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது அறக்கட்டளையின் இணை தலைவராகவும் அறங்காவலராகவும் உள்ள மெலின்டா, தனது பொறுப்புகளில் இருந்து விலகுவார் என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர், கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை, பில் கேட்ஸ் முழுமையாக ஏற்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.