நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

SHARE

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.4,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இதனை ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்பதால், உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

Leave a Comment