இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான “வணக்கம் சென்னை” படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி.
இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்போது கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார், விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமடைந்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
- மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்