நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

SHARE

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் – போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் வழக்கு…காவலர்களுக்கு ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுப்பு…

Admin

Leave a Comment