கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

SHARE

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம்  அலைகளுக்கு நடுவே உள்ள வேறுபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அடுத்தடுத்து கொரோனாவின் புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாசனையை உணர முடியாமல் போவது, தலைவலி, தொடர் இருமல், மூட்டு வலி ,தொண்டை வலி, தசை வலி, உடல் அசதி போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்பட்டன. அயல்நாடுகளில் உடலில் சிகப்புப் புள்ளிகள் தோன்றுவது உள்ளிட்ட இன்னும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இரண்டாவது அலையில் அதிகம் வெளிப்படவில்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நபர்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்கிறது அறிக்கை.

மூச்சுத் திணறலால் கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட தீவிரமாக இருப்பது போல தோன்றினாலும், இரண்டாவது அலைக்கும் முதல் அலைக்கும் நடுவில் அதிக வேறுபாடுகள் இல்லை. அதீத உயிர் இழப்புகளையும் இரண்டாவது அலை ஏற்படுத்தவில்லை. எனவே இரண்டாவது அலை அதிக தீவிரத்தன்மையோடு இல்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை.

கொரோனா வைரஸ் வகைகளையும் அதன் அறிகுறிகளையும்போல, அதன் தாக்கங்களும் மாறுபடக் கூடியது என்பதால் கொரோனா விவகாரத்தில் மக்கள் ஒருபோதும் முன்னெச்சரிக்கையைக் கைவிடாமல் இருப்பது நல்லது.

  • பிரியா வேலு.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

Admin

Leave a Comment