சிலிண்டர்களை வாட்ஸப் மூலம் பதிவு செய்யும் புதிய வசதியை கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
சிலிண்டர் தீர்ந்து போனால் முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் தங்கள் முகமைக்கு போன் செய்து வாடிக்கையாளர் எண்ணைக் கூறி அடுத்த சிலிண்டரை பதிவு செய்து வந்தனர். பின்னர் ஐ.வி.ஆர்.எஸ். சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து ஐ.வி.ஆர்.எஸ். எண்ணைத் தொடர்பு கொண்டு, அதில் கேட்கும் பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படி சிலிண்டரை பதிவு செய்ய முடிந்தது.
தற்போது இந்த வசதிகளின் அடுத்த கட்டமாக வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து சிலிண்டர் நிறுவனங்களின் வாட்ஸப் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்.
ஹெச்.பி. நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் 92222 01122 என்ற எண்ணுக்கு BOOK என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பாரத் கேஸ் நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் 1800224344 என்ற எண்ணுக்கு BOOK என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இண்டேன் நிறுவன சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் 75888 88824 என்ற எண்ணுக்கு REFILL என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
முதன்முறை பதிவு செய்யும்போதும் கூடுதல் விவரங்கள் கேட்கப்படலாம் அவற்றை அளிக்கவும். பதிவு வெற்றிகரமாக நடந்தால் உடனடியாக உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வரும். இதில் ஏதேனும் சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தால் உங்களுடைய முகவரை உடனே அணுகவும்.
- நமது நிருபர்.