வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.

SHARE

பல திருடர்கள் திருடிய பொருளை விற்கும் போதுதான் சிக்குவார்கள். ஆனால் நாம் பார்க்கப் போவது பொருளை திருடாமலேயே விற்கும் திறமையைப் பெற்ற ஒரு அசகாய திருடனைப் பற்றி.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரசுப் பேருந்துக்கு விலை பேசிக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கும் கண்டெக்டர், ‘இது உங்கள் சொத்து’ என்று வடிவேலுவை சொல்லவைத்து அடி வெளுப்பார். இதைப் பார்த்து சிரிக்கும் எவருக்கும், ‘இப்படியெல்லாம் ஏமாத்த முடியுமா? எல்லாம் நகைச்சுவைக்கு மட்டும்தான்’ என்று தோன்றி இருக்கும்.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் உண்மையாகவே அரசாங்கச் சொத்துகளை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்று கொள்ளை கொள்ளையாக பணம் அள்ளி இருக்கிறார். இத்தனைக்கும் இவர் விற்றது ஏதோ சிறிய சிறிய பொருட்களையோ, அதிகாரிகளின் வண்டிகளையோ, அரசாங்க வாகனத்தையோ அல்ல நினைவுச் சின்னங்களை. அதுவும் அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அதிபரின் வெள்ளை மாளிகை, பிக் பென் கடிகாரம் போன்ற உலகப் புகழ்பெற்ற நினைவுச் சிலைகளை!. படிக்கும் போதே தலைசுற்ற வைக்கும் இந்த சாகசங்களைச் செய்த அந்தத் திருடனின் பெயர் – ஆர்தர் பெர்குர்சன்.

1920களில் முதலாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து வெளியே வர முடியாமல் இங்கிலாந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது அமெரிக்கர்களிடம் பணம் விளையாடியது.

இந்தச் சூழலில் ஒருநாள் இங்கிலாந்தில் உள்ள ‘நெல்சன் தூண்’ என்ற நினைவுச் சின்னத்தை ஒரு அமெரிக்கப் பயணி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டி என்றும், உலகப் போரில் ஏற்பட்ட கடன்களைத் தீர்ப்பதற்காக புராதன நினைவுச் சின்னங்களை விற்றுத் தருமாறு இங்கிலாந்து அரசாங்கம் தன்னிடம் கேட்டு உள்ளதாகவும் ஆர்தர் சொல்ல. அதை அப்படியே அந்தப் பயணியும் நம்பினார்.

6000 பிரிட்டிஷ் பவுண்டுகள் என்ற மிகப் பெரிய தொகைக்கு அவர் ஆர்தரிடம் இருந்து நெல்சன் தூணையும் வாங்கினார். பின்னர் நெல்சன் தூணை வீட்டுக்குக் கொண்டுபோக அவர் சித்தாள்களோடு வந்தபோதுதான் உண்மை தெரிய வந்தது.

இது போலவே உலகப் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரத்தை விலைபேசி 1000 பவுண்ட்களையும், இங்கிலாந்து அரசி வாழும் பக்கிங்ஹாம் அரண்மனையை விலைபேசி 2 ஆயிரம் பவுண்ட்களையும் இவர் முன் பணமாகப் பெற்றுக் கம்பி நீட்டினார்.

இதனால் இங்கிலாந்து போலீஸ் இவரைத் தேடத் தொடங்க, தனக்கு ஏற்ற அடிமைகள் அமெரிக்காவில் இருப்பதை அறிந்த ஆர்த்தர் அமெரிக்காவுக்கே போனார். அங்கும் வெள்ளை மாளிகையை ஒரு சுற்றுலாப் பயணிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு விட்டு, முதல் ஆண்டுக்கான குத்தகைக் கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றார்.

இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த ஆர்தரின் வாழ்வில் ஒருநாள், அமெரிக்கா வந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் சுதந்திர தேவி சிலையை விற்கும் போது, அந்த ஆஸ்திரேலியரிடம் அட்வான்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டு ஓடி விடாமல், முழுப் பணமும் வரும் வரை ஆர்தர் காத்திருந்தார். இதனால் முதன் முறையாக காவல்துறையிடம் அவர் மாட்டினார்.

ஆனாலும் அவரிடம் ஏமார்ந்த பலரும் அதை வெளியே சொல்லாத காரணத்தால் காவல்துறை கைப்பற்றியது போக நிறைய பணம் ஆர்த்தரிடம் இருந்தது. மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர். விடுதலைக்குப் பின்னர் 1930களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரமான லாஸ் ஏன்சல்ஸ்-சில் சகல சொத்துகளோடு நிம்மதியாக வாழ்ந்து 1938ல் மறைந்தார். அவர் இறந்த 1938ஆவது ஆண்டு வரை அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஆர்தர் எப்போதும் சாத்தியமே இல்லாத மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவர் தன்னை ஒரு மோசடியாளன் என்று நினைக்காமல், மோசடிக் கலை வல்லுநராகவே கருதிக் கொண்டதாகவும் குற்றவியல் ஆய்வாளர்கள் அவனைக் குறிப்பிடுகின்றனர். ஆர்தர் அரசியலுக்கு வரவில்லை என்ற வகையில் அது அமெரிக்காவுக்கு நல்ல காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி… அதிசயம் நிகழ்ந்ததாக விவசாயி மகிழ்ச்சி

Admin

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

7 முறை மின்னல் தாக்கிய ‘மனித இடிதாங்கி’!.

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

1928ல் செல்போனா? – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

இரா.மன்னர் மன்னன்

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

அப்பாவை வேலை பார்க்க விடாத சுட்டிக் குழந்தை – இணையத்தில் வைரலாகும் காணொலி!.

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

Leave a Comment