சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

SHARE

விரைவில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆனால் ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு.

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சுங்க சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், சுங்கச் சாவடிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதாகவும், இதன்படி சுங்கச் சாவடிகளில் வண்டிகள் நின்று கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணங்களைப் பெறும் வழிமுறைகளை ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி ஒவ்வொரு சாலையிலும் அதன் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுப் பகுதியில் கேமராக்கள் இருக்கும் என்றும், அந்தக் கேமராக்களில் பதிவாகும் படங்களின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி கூறி உள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் சுங்கக் கட்டணம் என்பது சாலையைப் பராமரிக்கும் அளவுக்குதான் உள்ளது. சுங்கச் சாவடியை அமைத்த குறிப்பிட்ட காலத்தில் சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் வழக்கமும் பல நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில் சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதோடு, எவ்வளவு காலம் ஆனாலும் சுங்கக் கட்டணங்கள் கைவிடப்படுவதும் இல்லை.

இதனால், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, வருங்காலங்களில் சுங்கச் சாவடிகளை நீக்கினாலும் கூட, சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் எண்ணமே மத்திய அரசுக்கு இதுவரை இல்லை என்பதையே காட்டுகிறது.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

Leave a Comment