வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

SHARE

நமது நிருபர்

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது எழுந்த நிறவெறிக் குற்றச்சாட்டுக்கு இங்கிலாந்து ராணி விளக்கம் அளித்து உள்ளார்.

ஹாலிவுட் நடிகையான மேகன் மார்கல் சில ஆண்டுகள் முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியை காதல் திருமணம் செய்து கொண்டார். மார்கல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தவர் என்பதோடு அவர் ஆப்ரிக்க வம்சாவழித் தொடர்பும் உடையவர் என்பதால் இந்தத் திருமணத்தை ஏற்பதில் பிரிட்டன் அரச குடும்பம் தயக்கம் காட்டுவதாக அப்போதே தகவல்கள் கசிந்தன.

பின்னர் சில ஆண்டுகள் முன்பு இந்தத் தம்பதிகள் பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இதனை பிரிட்டன் அரச குடும்பமும் ஏற்றது. ஆனால் எந்த காரணத்திற்காக இவர்கள் வெளியேறினார்கள் என்பதில் பல்வேறு யூகங்களே வெளியாகின. மேகன் – ஹாரி தம்பதிகள் நேரடியான பதில் எதையும் கூறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் உலகின் நம்பர் 1 தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியான ஓபரா வின்பரேவின் நிகழ்ச்சிக்கு வந்த மேகன் மார்கல்,

”நான் கருத்தரித்து இருந்த காலங்களில், பிறக்கவுள்ள என் மகன் எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். ‘அவனுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது’ என்றெல்லாம் பேசப்பட்டன. அப்போது நான் இனி உயிர் வாழவே கூடாது என்று கூட நினைத்தேன்” – என்று கூறினார்.

இந்த பேட்டி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இங்கிலாந்து அரச குடும்பத்தை விமர்சித்தனர். மேகனின் தந்தையே ‘அரச குடும்பத்தினர் அப்படி எண்ணி இருக்க மாட்டார்கள்’ என்று அரச குடும்பத்துக்கு ஆதரவாகப் பேட்டி கொடுத்ததும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இது குறித்து இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,

’அரச குடும்பத்தின் மீதான புகார்களின் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், பொது வெளியில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். குடுபத்திற்குள் தவறுகள் சரிசெய்யப்படும். மேகன், ஹாரி, ஆர்ச்சி அகியோர் எப்போதும் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிரியமானவர்களாக இருப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

Leave a Comment