பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

SHARE

அழுதுகொண்டிருந்த அக்ஷராவுக்கு ஆறுதல் கூற கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். ’எனக்கு கத்திப்பேசுனா பயம் வரும்… பிரியங்காவும் அபிஷேக்கும் அப்படித்தான் என்கிட்ட மாத்திமாத்திப் பேசுறாங்க… எனக்கு அப்படிலாம் பேச வராது. இவங்க என்னையே மாத்திடுவாங்கப் போல… நல்லவங்களா இருக்கிறது தப்பா…?’ என்று பிக் பாஸிடம் அழுது கொண்டே புலம்பினார் அக்ஷரா. பிக் பாஸும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.

கார்டன் ஏரியாவில் அபிஷேக், பிரியங்கா, நிரூப் பேசிக்கொண்டிருந்தனர். ’நாம எப்படியாவது டாப் 5க்கு போயிடணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக். ’நாம மூனு பேரும் ஒன்னாவே இருந்து மத்தவங்க, ‘நாமளும் அந்த கேங்க்ல இருக்கணும்’னு நினைக்குற அளவுக்கு விளையாடணும்’ என்று கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசினார் பிரியங்கா. இப்படியே நாள் முடிய ‘ஆலுமா டோலுமா…’ பாடலுடன் தொடங்கியது அடுத்த‌நாள்.

கிச்சனில் பிரியங்கா சமைத்துக் கொண்டிருக்க, இமான் அண்ணாச்சி டைனிங் டேபிளில் இருந்து பிரியங்காவை கலாய்க்கும் விதமாகப் பேசி காண்டேத்த, பதிலுக்கு பிரியங்காவும் காண்டேத்த, இதை பெட்ரூமில் இருந்து அபிஷேக் மற்றும் நிரூப் பார்த்துக் கொண்டிருந்தனர். ’அவளை கண்ட்ரோல் பண்ணு, இல்லனா வெடிச்சிடுவா’ என்று அபிஷேக் சொல்ல, ’நீ தாண்டா அவளை ஏத்திவிட்ற.. அத முதல்ல நிறுத்து’ என்று நிரூப்பும் பதிலடிக் கொடுத்தார். இதைப் பார்க்கையில் ‘நிரூப் கொஞ்சம் நல்லவன்தான்’ என்று தோன்றியது.

கைப்பற்றப்பட்ட நாணயங்களை பொதுவில் அறிவிக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொல்ல, ‘வாங்கடா எல்லா திருடனும் வெளிய வாங்கடா’ மொமண்ட். நாணயங்களை வைத்திருந்த அனைவரும் வந்தனர். தாமரை – காற்று, வருண் – நீர், நிரூப் – நிலம், இசை – நெருப்பு, பாவ்னி – ஆகாயம் என்று அவரவர் நாணயங்களை பொதுவில் காட்டினர். அவர்களின் நாணயத்திற்கு பவர் குடுக்கும் விதமாக, வீட்டை பாகம் போட்டு பிரித்து கொடுத்தார் பிக் பாஸ்.

அதாவது, நிலம் நாணயம் வெத்திருக்கும் நிரூப்பிற்கு பெட்ரூம் ஏரியாவை பிக்பாஸ் கொடுத்தார். இனி அந்த இடம் அவருக்கு தான் சொந்தம் என்பதும், வேறு ஒருவர் அங்கு செல்ல வேண்டும் என்றால் நிரூப்பின் அனுமதியோடு அல்லது நிரூப் கொடுக்கும் டாஸ்க்கை செய்தால் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான் நாணயம் வைத்திருப்பவர்களின் பவர்.

இந்த போட்டியில் நாணயத்தை திருடலாம், திருடுபவருக்கும் அதே விதிகள் தான். இதே மாதிரி, தாமரை வைத்திருந்த காற்று நாணயத்துக்கு கார்டன் ஏரியாவும், இசை வைத்திருந்த நெருப்பு நாணயத்திற்கு கிச்சன் ஏரியாவும், நீர் நாணயம் வெத்திருந்த வருணுக்கு பாத்ரூம் ஏரியாவும், காற்று நாணயம் வைத்திருக்கும் பாவ்னிக்கு லிவ்விங் ஏரியாவும் கொடுக்கப்பட்டது. இனி அவனவன் தன்னோட‌ எதிரிய வச்சி செய்யப்போறான்-ன்ற நிலைமைதான் இருந்தது.

அதற்கு முதல் போணி நான் போடுகிறேன் என்று ஆரம்பித்தார் பிரியங்கா. பெட்ரூம் வாசலில் சின்னப்பொண்ணு ’வரலாமா’ என்று கேட்க, நிரூப்பும் ’நீங்க எப்பவும் வரலாம்’ என்று பெருந்தன்மையோடு நடக்க, அதற்கு பிரியங்கா ’என்னை பற்றி ஒரு பாட்டு பாட சொல்லுடா’ன்னு கேட்க, சைலட்டாக பிரியங்காவை அதட்டினார் நிரூப். பிரியங்கா இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல… இதே போல் பாத்ரூமிற்கு சென்ற பிரியங்காவை, ’நாய் போல வாங்க’ என்று வருண் கூற அதயே நக்கலாக செய்தார் பிரியங்கா. பிரியங்காவை இப்படி பார்க்க நல்லாவே இருந்தது.

’நான் இங்க படுத்துக்கவா’ என்று பிரியங்கா நிரூப்பிடம் கேட்டு படுத்துக் கொண்டார். இதற்கிடையில், நம்ம ஆட்டம் ஆரம்பிக்கணுமே – என்று பாவ்னா மற்றும் மதுமிதாவிடம் வந்த அபிஷேக், ’நீ நான் மதுமிதாதான் டாப்ல இருக்கணும் புரிதா, தாமரை,வருண், இசை ஒரு டீம், அவங்க அதிகமா இருக்காங்க, நம்ம கேங்க் பெருசாக்கணும்னா, நாம பாத்ரூம் ஏரியாவ எடுக்கணும்’ என்று பேசிக்கொண்டிருந்தார்.

அடுத்து அபிஷேக் பாத்ரூமில் வருணிடம் பேசிவிட்டு சென்று, திரும்ப பாவ்னி மற்றும் மதுமிதாவிடம் வந்து ’எப்படி ஏன் ஏரியாவை தொடுறீங்கன்னு என்கிட்ட செலஞ்ச் பண்றான் வருண்’னு அப்பட்டமாக ஒரு பொய்யை அள‌ந்துவிட்டுக் கொண்டிருந்தார்.

வெளியே இமான் அண்ணாச்சியும் இந்த அபிஷேக்கை கொஞ்சம் உசுப்பேத்தி விடுவோம்னு, சும்மாவே கார்டன் ஏரியாவைத் தான் கைப்பற்றியதாக நாடகம் ஆடினார். சரி கார்டன்தான் போச்சு கிச்சன் ஏரியாவைப் பார்ப்போம் என்று இசை, சுருதி பார்க்கும் போதே, அபிஷேக் நாணயத்தை எடுத்து வைத்துக் கொண்டு, ’கொஞ்சம் நேரம் வெச்சிக்கிறேன், அப்புறம் திரும்பக் கொடுத்துடுவேன்’ என்று கூறி சமாளிக்க, ’அப்போ அது அங்கயே இருக்கட்டும்’ என்று பதிலடி தந்தார் சுருதி. அபிஷேக் சமாளிக்க முற்பட, ’என் ஆட்டத்தை நான் ஆடிக்கிறேன் நீ எதுவும் உதவ வேண்டாம்’ என்று மூக்கை உடைத்தார் சுருதி.

இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் இரண்டாம் கட்டம் முடிவடைந்தது என்றும், மூன்றாம் கட்டம் ஆட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிக் பாஸ் தெரிவித்தார். கார்டன் ஏரியாவில் நிரூப் அபிஷேக்கிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார், ’நீ மத்தவங்கள இன்ப்ளூய‌ன்ஸ் பண்றது நல்லாவே தெரியுது, அதனால தான் நீ நாமினேட் ஆகுற…. உன்னோட ஆட்டத்தை நீ மாத்து’ன்னு சொல்ல, ’சரி ஓகே’ என்று தற்காலிக பதிலாகக் கூறினார் அபிஷேக்.

அடுத்த கட்ட போட்டியாக ‘பஞ்ச பூதங்களில், தங்களையும் மற்ற ஹவுஸ்மேட்ஸையும் எந்த பஞ்ச பூதத்தோடு ஒப்பிடுகிறீர்கள், நீங்கள் நினைப்பதை கூற வேண்டும், என்று அறிவித்தார் பிக் பாஸ். பெரும்பாலானோர் தங்களை நெருப்புடனே ஒப்பிட்டனர். சரி நம்ம கதாசிரியர் என்ன சொல்லப்போகிறார் என்று நம்மைப்போலவே ஹவுஸ்மேட்ஸும் எதிர்நோக்க, ராஜு தன்னை காற்றுடன் ஒப்பிடுவதாகவும், பிரியங்காவை நெருப்புடன் ஒப்பிடுவதாகவும் கூறினார். பிரியங்காவுக்கு கட்டாயம் இது உள்ளே எரிந்திருக்கும்…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

Leave a Comment