பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

SHARE

நேற்று துபாயில் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 13ஆவது ஓவரிலேயே இலக்கை அடைந்து ஆட்டத்தை முடித்து அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சென்னை அணி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓப்பனர்களாக வந்த ருதுராஜ் மற்றும் டூப்ளஸி பவர்பிளே ஓவரிலேயே தடுமாறினார்கள். ருதுராஜ் பந்துகளை கீளியர் செய்வதற்கே கஷ்டப்பட்டார். 12 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் பந்தில் கேட்ச் கொடுத்து சென்றார். டூப்ளஸிக்கு பஞ்சாப் அணியிடம் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உள்ளதால், நிதானமாக ஆடினார். அதனாலேயே என்னவோ டூப்ளஸி தவிர மற்ற அனைவரும் வந்த வேகத்தில் ஃபெவிலியனுக்கு திரும்பினர்.

மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமல் சுஞ்சுவிடம் கேட்ச் கொடுத்து சென்றார். உத்தப்பா 2 ரன்களோடு வெளியேறினார். ராயுடு 4 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தோனி 2 பவுண்டரிகளை அடிக்க ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பந்து வீச்சாளர் பிஷ்னோய் அந்த மகிழ்ச்சியை அதிக நேர நிலைக்க விடவில்லை, பவுண்டரி அடித்த அதே ஓவரில் தோனியின் விக்கெட் விழுந்தது.

19ஆவது ஓவரில் சென்னை அணி, 115 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் அடுத்து வந்த ஜடேஜாவோடு சேர்ந்து 1 பவுண்டரி 1 சிக்ஸர் என 76 ரன்னில் வெளியேறினார் டூப்ளஸி. இறுதியாக சென்னை அணி 134 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணிக்கு ஃபிளே ஆஃப்பிற்கு செல்ல வாய்ப்பு குறைவு என்பதை விட, வாய்ப்பு கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் நல்ல நெட் ரன் ரேட்டில் இவர்களும் வெற்றி பெற்று, இவர்களுக்கு முன்னால் இருக்கும் கொல்கத்தா மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளின் அடுத்தடுத்த ஆட்டங்கள் தோல்வியுற்றால் மட்டுமே பஞ்சாப் தகுதி பெறும்.

அதற்கு முதலில் நல்ல நெட் ரன் ரேட்டில் ஜெயிக்க, இந்த ஆட்டத்தை 14ஆவது ஓவருக்கு உள்ளாகவே முடிக்க வேண்டும் என்பது கட்டாயனம். இதெல்லாம் நடக்குறதா? – என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பேட்டால் பதிலளித்தார் கேஎல் ராகுல்.

134 ரன்களை அசால்ட்டாக 13 ஓவரிலேயே முடித்து கெத்து காட்டியது பஞ்சாப் அணி. ஒன் மேன் ஆர்மி மாதிரி இவர் மட்டுமே 42 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். 25 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை முடித்தார் கேஎல் ராகுல். சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி கூட அடிக்க முடியுமா என்று வாயை பிளந்து பார்க்க… பவுண்டரிகளை அள்ளி வீசினார். யாரிடம் இருந்து என்ன பந்து வருகிறது என்பதை கூர்ந்து கவனித்து, சரியாக தட்டினார் ராகுல்.

தோனியே ஆட்டத்தையும் மீறி இவரின் பவுண்டரிகளை பார்த்து இவனுக்குள்ளயும் ஏதோ இருக்கு பாரேன் என்று ரசிக்க ஆரம்பித்தார். 13ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 139 ரன்களில் அபார வெற்றி அடைந்தது பஞ்சாப் அணி.

இதனால் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் -0.001 ரன் ரேட் பெற்றுள்ளது. இருக்கும் கடைசி வாய்ப்பு வரை ராகுல் போராடியது அவர் சிறந்த‌ வீரர் என்பதை எடுத்து காட்டியது. ஆனால் டீமில் இவர் மட்டும் ஆடுனால் மட்டும் போதுமா என்ன?. பஞ்சாப் அணி பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறுமோ இல்லையோ, ராகுலின் இந்த ஆட்டம் நிச்சயம் அவருக்கு பலனாக அமையும்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment