சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

SHARE

இன்னைக்கு ஐபிஎல் மேட்ச் அனல் தெறிக்க விடப்போற ஆட்டமா இருக்கப் போகுது-ன்றதுல சந்தேகமே இல்ல. ஏன்னா, ஆடப்போறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ். 

ஐபிஎலோட இந்த இரண்டாம் பாகத்துல சென்னை சூப்பர் கிங்ஸ் புது வேகத்துடன் விளையாட்ட ஆரம்பிச்சிருக்குறாங்கன்னு மும்பை இண்டியன்ஸ் அணிய மண்ண கவ்வ வெச்சதுலயே தெரிஞ்சது. ஆனா ராயல் சேலஞ்சர்ஸ் கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்காங்க. கடைசியா நடந்த கொல்கத்தா அணியுடனான ஆட்டத்துல அவங்க 9 விக்கெட் வித்தியாசத்துல மாபெரும் தோல்வி அடைஞ்சதுல இருந்து இன்னும் மீளல.

இன்னைக்கு நடக்கப்போற ஆட்டத்துல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே வேகத்தோட விளையாடுவாங்களா? இல்லனா அடிபட்ட பாம்பா இருக்குற ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதிரடி காட்டப் போறாங்களான்றத நாம பொறுத்திருந்து தான் பார்க்கணும். 

இன்னைக்கு மேட்ச்ல இருக்குற சில சுவாரஸ்யமான விஷயங்கள பாக்கலாம்.

முதல்ல நம்ம கவனத்த ஈர்க்குறது இன்னைக்கு மேட்ச் நடக்கப்போற இடம்தான், ஷார்ஜா. ரொம்பவே சின்ன மைதானம்தான். அதனால பந்த சும்மா தூக்கினாலே சிக்ஸ், ஃபோர் தான்.  இந்த ஃபிட்ச்ல குறைந்தபட்ச ஸ்கோரே 200 க்கு மேல இருந்திருக்கு. நின்னு ஆடுறவங்களுக்கு அல்வா மாதிரி இருக்கும். நம்ம ருதுராஜ் கெய்க்வாட் வேற ஃபுல் பார்ம்ல இருக்காரு. இந்த பிட்ச்ல ஃசேஸிங்ல விளையாடினவங்கதான் அதிகமா ஜெயிச்சிருக்காங்க. அதனால தோனி டாஸ் ஜெயிச்சா பவுலிங்தான் தேர்வு செய்வார்ன்னு எதிர்ப்பார்க்கலாம். 

ஸ்பின்னர்ஸ்க்கு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கும் இந்த ஃபிட்ச். எப்பவும் ஓடி வரும்போதே ’இப்படி போடு அப்படி போடு’ன்னு ஜடேஜாவுக்கு ரன்னிங் கமண்ட்ரி குடுக்குற தோனி, இன்னைக்கு அப்படி செய்ய முடியாது. ஜடேஜா ஃபெளலிங்குல முடியலைன்னாலும், ஃபீல்டிங்ல கலக்கலாம். 

ஏன்னா ஐபிஎல் முதல் பாகத்துல பெங்களூரு அணியோட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதுன ஆட்டத்துல, கடைசி ஓவர் வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவரா ஆனத கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டாங்க. அப்ப ஒரே ஒவர்ல, 6 பந்துக்கு 37 ரன் எடுத்த ஜடேஜாவுக்கு மறுபடியும் இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பா இருக்கும். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியோட பந்து வீச்சாளர்களுக்கும் ரொம்பவே சவாலான ஃபிட்ச்தான் இது.  பேட்டிங்ல ரொம்பவே எதிர்ப்பார்க்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் அணியில டாப் ஆர்டர் மற்றும்  மிடில் ஆர்டர்ஸ் மேட்ஸ்மேன்தான். ஓப்பனிங் மேட்ஸ்மேனுக்கு பெரிய ஃப்ளஸ் இந்த ஃபிட்ச். அதனால கோலியோட நிதானமான ஆட்டம்தான் இன்னைக்கு அவங்களுக்கு கம் ஃபேக் கொடுக்கும். அவங்களுக்கு இருக்குற  மிகப்பெரிய ஃப்ளஸ் மேக்ஸ்வெல், ஏபிடிவில்லியர்ஸ் இருவர்தான் அவங்க உயரத்துக்கு தூக்கி அடிச்சா எல்லாமே சிக்ஸ், ஃபோர் தான். 

சென்னை சூப்பர் கிங்ஸ்ல ருதுராஜ், ப்ராவோ, ஜடேஜா, டூப்ளஸி இப்போ டாப்ல இருக்காங்க ஆனா ராயல் சேலஞ்சர்ஸ் அணில பேட்டிங் மற்றும் பெளலிங் ரெண்டுமே கொஞ்சம் வீக்கா இருக்கு. இந்த சின்ன பிரச்சனைகளை தெரிஞ்சு சரியா விளையாடினா ராயல் சேலஞ்சர்ஸ் அணி கெத்துதான். 

கேப்டன் பதவியில இருந்து இந்த தொடரோட வெளியேறப் போறதா சொல்ல கோலிக்கு இது மிக முக்கியமான ஆட்டங்கள்ல ஒன்னா இருக்கும். ஆனா ரசிகர்களோட சப்போர்ட் எப்பவும் தோனி பக்கம்தான் இருக்கும்.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Admin

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Leave a Comment